இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்! கூகுள் டாக்ஸில் அறிமுகமாகும் புதிய வசதி

Loading...

இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்! கூகுள் டாக்ஸில் அறிமுகமாகும் புதிய வசதிஇணையம் வழியாக ‘டைப்’ செய்து ஆவணங்களை உருவாக்கிக் கொள்ள உதவும் ‘கூகுள் டாக்ஸ்’ சேவையில் ‘வாய்ஸ் டைபிங்’ எனப்படும் குரல் வழி டைப்பிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இனி கூகுள் டாக்சில் ‘டைப்’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ‘டைப்’ செய்ய வேண்டிய வாசகங்களை குரல் வழி ‘டிக்டேட்’ செய்தாலே போதுமானது.

பிரவுசரின் செட்டிங் பகுதிக்குச் சென்று வாய்ஸ் டைப்பிங் அம்சத்தைத் தெரிவு செய்வதன் மூலம் இந்த புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதன் பிறகு பேசத் தொடங்கினால் போதும் எழுத்துக்கள் தானாக ‘டைப்’ ஆகும்.

ஆங்கிலம் உள்ளிட்ட 40 மொழிகளில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. இந்திய மொழிகளில் இந்தி மொழி இடம்பெற்றுள்ளது. தமிழையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

இது தவிர ஆவணங்களிலிருந்து தொடர்புடைய தகவல்களைத் தேடும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN