இது தாங்க அழகு..!

Loading...

இது தாங்க அழகு..!முகத்துக்கு போடும் மேக்கப்பை, கழுத்து, கைகளுக்கு ஒரே சீராக போட வேண்டும். இல்லாவிட்டால் முகம் ஒரு நிறம், கழுத்து ஒரு நிறமாகத் தெரிந்து இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டதற்கு பலன் இல்லாமல் போய் விடும்.

சப்பையான மூக்கை எடுப்பாகவும், சற்று பெரிதான மூக்கை சிறியதாகவும் காட்ட சரிப்படுத்தும் மேக்-அப் மூலம் லைன்கள் வரைந்து சரி செய்து விடுவோம். கன்னத்தில் போடும் சிவப்பழகு மேக்கப் என்பது தனியாக சிவப்பாக தெரியக் கூடாது. முகத்தின் மேக்கப்போடு ஒன்றி வர வேண்டும். இதை சரியான முறையில் போடுவதால் பள்ளம் விழுந்த கன்னங்களாக இருந்தால் கூட அவற்றை உயர்த்திக் காட்ட முடியும்.

இறுதியாக நெற்றியில் வைக்கும் பொட்டு மெரூன் அல்லது பிரவுண் நிறத்தில் வைப்பது நல்லது. அதைச் சுற்றி டிசைன்கள் போட்டுக் கொள்ளலாம். அதிகமாக கல் அல்லது ஜரிகை வைத்த பொட்டுகள், வீடியோ வெளிச்சத்தில் பட்டு மினுங்கினால் நெற்றியில் பொட்டே இல்லாத தோற்றத்தை அளித்துவிடும். முன் நெற்றியிலும், கண்களின் ஓரங்களிலும் சிறிய கற்களை வைத்துக்கொள்வது தற்போது பேஷன் ஆகி வருகிறது. இது பொட்டு இல்லாத இடங்களில் வைப்பதில் மேலும் அழகு சேர்க்கிறது என்கிறார் பிரபல அழகுகலை நிபுணர்.

மணமகள் அலங்காரம் அற்புதமாக அமைய இதோ…

மொத்தத்தில் மேக்கப் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றால் இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும். குறிப்பாக முகத்தில் இருக்கும் புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது முகம் பளபளப்பாகவும், மிகுந்த பொலிவுடனும் காணப்படும். நாம் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. அழகுப்பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால் எந்தவிதமான தொல்லைகளோ, பாதிப்போ வராமல் இருக்க வேண்டும். இதற்கு சுத்தமான, தரமான அழகுப்பொருட்களையே நாங்கள் உபயோகப் படுத்துகிறோம். இதே போன்று முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.

மணப்பெண் சிகை அலங்காரம் மற்றொரு முக்கியமான பகுதி. மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன்பு, முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம். பெண்களில் சிலருக்கு நீண்ட முடி, தடிமனான முடி ஆக இருக்கும். அவர்களுக்கு ஏற்றாற்போல் அவர்களுடைய முடியை அவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு ஹேர்ஸ்டைல் சூப்பராக இருக்க வேண்டும். அவர்களுடைய முகம் வடிவத்துக்கு ஏற்ப சிகை அலங்காரம் இருந்திட வேண்டும். இதில் சிலருக்கு முடி அதிகமாக இருக்காது. அல்லது அவர்கள் மாடர்ன் முடி கட் செய்திருப்பார்கள். அவர்களுக்கு தகுந்தபடி முன் பகுதியை சரி செய்து ஹேர்ஸ்டைலை தேர்வு செய்து போடுவது மிகவும் முக்கியம். மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றையும் கணக்கிட்டு மிகவும் கவனமாக செய்ய வேண்டிய விஷயம்.

குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு சற்றே தூக்கியவாறு உள்ள கொண்டையும், நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும் கொண்டையும் போடுவது அழகாக இருக்கும். முகம் நீளமாக இருந்தால் காதுகளை மூடியும், இரண்டு பக்கத்திலும் சிறிது முடியை சுருள் செய்து தொங்கவிடலாம். இது முகத்தை அகலமாக காட்டும். அகலமான முகம் உடையவர்களுக்கு முன் பகுதி எனப்படும் முகத்தின் முன்பக்க முடியை தூக்கி காட்டுவதன் மூலம் முகத்தை உருண்டையாக காட்ட முடியும். இதில் முன்பகுதி முகத்தின் அமைப்புக்கு ஏற்ப மொத்த முடியையும் பின் நோக்கி இருப்பது போல் பின்பக்கமாக சிவுவதோ அல்லது நடு வகிடு எடுத்து இரண்டு புறமும் பின்புறமாக சீவி முகத்தின் வடிவத்துக்கேற்றாற் போல் உயர்த்தி காட்டலாம். நடுவில் வகிடு இருக்கும் இடத்தில் அழகிய நெற்றிச் சுட்டியை வைக்கலாம். இன்னொரு முறை காதின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்துக்கு பின்புறமாக தலைசீவ வேண்டும். இதில் நெற்றிச்சுட்டி வைக்க முடியாது. இந்த மாதிரி முன்புறம் சரி செய்யும் போது முன் நெற்றியில் ஒட்டிக் கொள் ளும் சுட்டி கிடைக்கிறது. அவற்றை வைத்தும் பொருத்திக் கொள்ளலாம்.

மாலை நேர ரிசப்சன் அலங்காரத்தில் கொண்டை விரும்பாதவர்கள் தவிர பின்னல் வேண்டும் என்பவர்கள் பிரெஞ்ச் பிளேட் போட்டு பின்னால் பின்னலை பின்னி விட வேண்டும். அக்காலத்தில் கல்யாண பெண்கள் பூக்கள் மூலம் ஜடை தைத்துக் கொள்வார்கள். இந்தக்காலத்தில் பின்னலின் மேல் ஜரிகை, முத்து, பூக்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட மோடிவ் ஆகியவைகளை கொண்டு அலங்கரிக்கலாம். இதில் நீளமுடி அலங்காரம் செய்வது சாதாரணமாக அதிக முடி உள்ளவர்களுக்கு செய்யலாம். குறிப்பாக மணப்பெண் களுக்கு இந்த அலங்காரம் மிகவும் பொருந்தும். அதில் நீண்ட முடி உள்ளவர்கள் கோல்டன் த்ரெட் பின்னல், மேலே கொண்டை, கீழே பின்னல், பைப் பின்னல், அடுக்கடுக்கு பின்னல், ஐந்துகால் பின்னல் போன்றவை மிகவும் அழகாக இருக்கும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply