இதயத்திற்கு நலம் தரும் எண்ணெய் தன்மையான மீன்கள்

Loading...

இதயத்திற்கு நலம் தரும் எண்ணெய் தன்மையான மீன்கள்சல்மன், வார்டின், மேகரல் trout and herring போன்றவை எண்ணெய் தன்மையான மீன்களாகும். இவற்றில் இருதயத்திற்கு மிகவும் நல்லதான omega-3 fatty acids என்ற கொழுப்பு கூடியளவு உண்டு. குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் ஒமேகா கொழும்பு பெரிதும் உதவுவதால் கர்ப்பணிகளும் பாலுட்டும் தாய்மார்களுக்கும் அவசியமானது.

அத்துடன் ஒமேகா 3 கொழும்பு அமிலமானது உயர் இரத்த அழுதத்தைக் குறைக்கும், குருதிக் குழாய்களில் (நாடிகள் artery) கொழுப்பு படிவதைத் தடுக்கும் என்பதால் மாரடைப்பு அஞ்சைனா பக்கவாதம் போன்ற குருதிக் குழாய் நோய்களை ஏற்படுவதைக் குறைக்கும் என்பது நன்கு தெரிந்ததே. இவற்றிற்கு அப்பால், மூப்படையும் போது ஏற்படும் பார்வைக் குறைப்பாடு நோய் ஏற்படாமல் தடுக்கும்.

மூப்படையும் போது ஏற்படும் முதுமை மறதிநோய் (Dementia) ஏற்படுவதைத் தடுக்கும், புரஸ்ரேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றெல்லாம் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும் இவற்றை உறுதிப்படுத்த மேலும் தெளிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான பல்திறப் பயன்பாடு கருதி ஒமேகா 3 மீன் எண்ணெய் மாத்திரைகளாக அடைத்து விற்பனை செய்கிறார்கள்.

அமோகமாக விற்பனை ஆகிறது. ஆயினும் இதனை விட இயற்கையாகவே மீனிலிருந்து பெறும்போது பலன் அதிகமாகக் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தன்மையான மீன்களில் விட்டமின் டி (VitaminD) அதிகம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. whitebait, pilchards, மற்றும் தகரத்தில் அடைக்கப்பட்ட சல்மன், சாடின் போன்றவற்றில் உள்ள எலும்புகளும் உட்கொள்ளப்படுவதால் அவற்றிலுள்ள கால்சியம் பாஸ்பரஸ் போன்றவை எமக்கு அதிகளவு கிடைக்கின்றன. இவை உறுதியான எலும்பைப் பேண எமக்கு உதவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply