இஞ்சி மிளகாய் ஊறுகாய்

Loading...

இஞ்சி மிளகாய் ஊறுகாய்பச்சை மிளகாய் – 1/4 கிலோ
எலுமிச்சை பழம் – 10
இஞ்சி – 100 கிராம்
மஞ்சள் – 1 டீஸ்பூன்
கடுகுத்தூள் – 4 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – 5 டீஸ்பூன்
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

பச்சைமிளகாயை நன்றாக கழுவித் துடைத்து, துண்டு துண்டாக நறுக்கக் கொள்ளவும்.
இஞ்சியையும் துண்டு துண்டாக நறுக்கி மிளகாயுடன் சேர்த்துக்கொள்ளவும்.
உப்பையும், மஞ்சள் பவுடரையும் நன்றாக கலந்து அந்த துண்டுகள் மீது தூவி நன்றாக கலக்கவும்.
எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி சாறு பிழிந்து, இதனுடன் கலவையை சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடேறியவுடன் பெருங்காயம், கடுகுத்தூள் இட்டு தாளித்து அதனுடன் கலந்துவிடவும்.
ஒரு நாள் கழித்து உணவுடன் சேர்த்துக்கொள்ள மிகவும் ருசியாய் இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply