ஆப்பிள் கேசரி | Tamil Serial Today Org

ஆப்பிள் கேசரி

ஆப்பிள் கேசரிநறுக்கிய ஆப்பிள் – 1 கப்
ரவை – ஒரு கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 300 கிராம்
ஏலப்பொடி – சிறிது
முந்திரி – 25 கிராம்
கேசரி பவுடர் – 1/2 சிட்டிகை

முதலில் 3 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும்.
கனமான பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, ரவை இரண்டையும் போட்டு, முந்திரி லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.
பிறகு கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கிளறி விடவும். அதன் பிறகு சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.
சர்க்கரை சேர்த்ததும் முதலில் தளர்ந்து பின்பு கெட்டியாகத் தொடங்கும்.
கெட்டியாகும்வரை கிளறி பிறகு அதனுடன் கேசரி பவுடர் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள பழத்தினையும் சேர்த்து, உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

Loading...
Rates : 0
VTST BN