ஆப்பம்

Loading...

ஆப்பம்பச்சரிசி – 2 கப்
புழுங்கல் அரிசி – 2 கப்
உளுந்து – ஒரு கைப்பிடி
சாதம் – ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை

பச்சரிசியுடன் புழுங்கல் அரிசி மற்றும் உளுந்து சேர்த்து கழுவி 3 மணி நேரம் ஊற‌ வைக்கவும்.

கிரைண்டரில் முதலில் சாதத்தை போட்டு நன்கு அரைத்து அதனுடன் ஊற வைத்த‌ அரிசியை சேர்த்து அரைக்கவும். (சாதத்தை கடைசியாக சேர்த்தால் அரைப்படாது ஆகவே முன்னமே அரைக்கிறோம்.)

சற்று கொரகொரப்பாக‌ இருக்கும் போதே வழித்து எடுத்து விடவும். தேங்காய் சேர்க்கும் விருப்பம் உள்ளவர்கள் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைக்கலாம். மாவுடன் உப்பு சேர்த்து ஒரு நாள் முழுவதும் புளிக்க‌ விடவும். நன்கு புளித்து இருந்தால் தான் ஆப்பம் மிருதுவாக‌ வரும்.

புளித்த‌ மாவுடன் ஒரு சிட்டிகை ஆப்ப‌ சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு நீர்க்க‌ கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஆப்ப‌ சட்டியை வைத்து நன்கு சூடேற்றி பின் சிம்மில் வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி மேலும் கீழுமாக சாய்க்கவும்.

பின்னர் அதே போல் இடமிருந்து வலமாக‌ சாய்க்கவும்.

அதேப் போல் கிரிஸ் க்ராஸாக‌ இடபக்க‌ மேலிருந்து வலபக்க‌ கீழாக‌ சாய்க்கவும்.

அதன் பிறகு கிரிஸ் க்ராஸாக‌ வல‌பக்க‌ மேலிருந்து இட‌பக்க‌ கீழாக‌ சாய்க்கவும். X போல‌ சாய்க்கவும். இதை மூடி போட்டு சிம்மில் ஒரு நிமிடம் வேக‌ விடவும்.

தேங்காய் பாலுக்கு தேங்காயை நன்கு அரைத்து 2 (அ) 3 முறை தண்ணீர் விட்டு பால் பிழிந்து அதனுடன் தேவைக்கேற்ப‌ சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

ஆப்பம் வெந்த‌தும் எடுத்து தேங்காய் பாலுடன் பரிமாறவும். சுவையான‌ மிருதுவான‌ ஆப்பம் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply