ஆடைகளை துவைத்து மடித்து தரும் உலகின் முதலாவது ரோபோ

Loading...

ஆடைகளை துவைத்து மடித்து தரும் உலகின் முதலாவது ரோபோஆடைகளை துவைத்து உலர்த்தி தரும் சலவை இயந்திரங்கள் பற்றி நன்றாக தெரிந்திருப்பீர்கள்.
ஆனால் ஆடைகளை துவைத்து, உலர்த்துவதுடன் மட்டுமன்றி அழுத்தி மடித்து தரக்கூடிய ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Panasonic நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ டோக்கியோவில் இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டிற்கான Combined Exhibition of Advanced Technologies நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபோக்களை உருவாக்கிவரும் ஜப்பானின் இப்புதிய ரோபோவும் தொழில்நுட்ப உலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இவ் வருட ஆரம்பத்தில் ரோபோக்கள் மட்டுமே இயக்கும் அதி நவீன ஹோட்டல் ஒன்றும் ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply