அவித்த ஆம்லெட்

Loading...

அவித்த ஆம்லெட்முட்டை – 1
மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி
வெண்ணெய் – கால் தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை

ஒரு அகன்ற வாணலியில் அரைபாகத்திற்கு நீர் விட்டு கொதிக்கவிடவும்.
கொதிவர ஆரம்பித்தவுடன் அடுப்பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும்.
முட்டையின் கூரிய பகுதியை சற்றுப் பொரிதாக உடைத்துக் கொள்ளவும். முட்டை கரு எளிதில் வெளியே வருமாறு உடைத்துக் கொள்ளவும்.
முட்டை கருவை ஒரே ஊற்றில், தெறிக்காதவண்ணம் அருகில் வைத்து, கொதிக்கும் நீரில் ஊற்றவும்.
இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு பிறகு எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும்.
சூடாக இருக்கும்போதே அதில் மிளகுத்தூள் உப்பு இரண்டையும் கலந்து தூவவும்.
வெண்ணெயை மேலே இலேசாக தடவி விடவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply