அழகுசாதன பொருட்களின் பயன்பாடு !!

Loading...

அழகுசாதன பொருட்களின் பயன்பாடு !!கோல்ட் கிரீம்:
சருமத்தில் உள்ள அழுக்கை அகற்றி சுத்தப்படுத்துகிறது. கோடை,குளிர் என ஆண்டு முழுவதும் உபயோகப்படுத்தலாம். இது ‘ஆல் பர்ப்பஸ்’ கிரீம் ஆகும். எந்த வகை சீதோஷணத்திற்கும் உகந்தது.
வானிஷிங் கிரீம்:
சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைத்து ,சருமத்திற்கு பளபளப்பு ஊட்டுகிறது.நரிஷிங் கிரீம்: சருமத்திற்கு போஷாக்கு அளிக்கிறது.
அஸ்ட்ரிஞ்ஜென்ட் லோஷன்:
சருமத் துவாரங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குகிறது.
க்லென்சிங் கிரீம்:
முகத்தில் உள்ள அழுக்கை அகற்றவும், ‘மேக் அப்’ கலைக்கவும் பயன்படுகிறது.
கொலமின் லோசன்:
சருமத்தில் உள்ள புள்ளிகளை அகற்றி, சருமத்தை மாசு, மருவில்லாமல் வைக்கிறது.
பௌன்டேஷன் கிரீம்:
இது ‘மேக் அப்’ நல்ல விதமாக அமைய உதவி புரிகிறது. மேலும் புள்ளிகளையும், திட்டுகளையும் நீக்குவதையும் செய்து, சருமத்தையும் மிருதுவாக வைத்துக் கொள்கிறது. கன்னங்களை பளபளப்பு ஆக்குகிறது.
ரூஜ்:
உதடுகளையும், கன்னங்களையும் சிவப்பேற்ற உதவும் சாதனம். இது திரவ வடிவிலும், கேக்காகவும், கிரீம் மாகவும் கிடைக்கிறது. கண்களோ, அது கருவண்டோ என அதிசயிக்க வைக்க உதவும் சாதனங்கள்.
ஐ ஷடோ:
கண்களின் வடிவத்தையும், நிறத்தையும் மேம்படுத்திக் காட்டுவதற்காக உபயோகப்படுத்துவது.
மஸ்காரா:
கண் இரப்பை முடிகளை அடர்த்தியாகக் காட்டுவதற்கõகப் பயன்படுத்தப்படுகிறது. மாலை நேர ஒப்பனைக்கு சாலச் சிறந்தது. லிப்ஸ்டிக்: முக ஒப்பனையில் நிறைவுப் பகுதி உதடுகள் தான். பெரிய உதடுகளைச் சிறியதாக்கவும், மிகச் சிறிய உதடுகளைப் பெரியதாகவும் காட்ட உதவுகிறது.
லிப் லைனிங் பென்சில்:
கச்சிதமான உதடுகள் அமைய பெறாதவர்களுக்கு இது ஒரு ‘சஞ்சீவி’ என்று தான் சொல்ல வேண்டும். உதடுகளைப் பொருத்தமான அளவுக்குத் திருத்தி, பொலிவுறச் செய்வதே இதன் வேலை. அனைத்து ஒப்பனை சாதனங்களும் நல்ல தரமான தயாரிப்புகளாக இருத்தல் அவசியம். அதுதான் சருமத்திற்கு நல்லது. அழகுக்கு அழகு செய்யும் ஒப்பனை!!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply