அழகுக்கு அழகு செய்ய..

Loading...

அழகுக்கு அழகு செய்ய..சருமப் பாதுகாப்பிற்கு எந்த மாதிரி உணவைத் தேர்ந்தெடுப்பது?

முகம் மிகவும் மிருதுவாக உள்ளது. ஆனால் கொஞ்சம் சதை தொங்கியது போலும் உள்ளது. என்றால் அதற்கு சருமப் பாதுகாப்பு மிகவும் அவசியம்.

சருமப் பாதுகாப்பிற்கு சர்க்கரை போடாமல் காலை உணவிற்குப் பிறகு ஆரஞ்சு சாறு ஒரு தம்ளர் சாப்பிடுங்கள். வைட்டமின் ஏ சருமத்திற்கு மிகவும் நல்லது. பால், கேரட், பசலைக்கீரை, பச்சைக்காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நம் உடலுக்குத் தேவைப்படும் எரிசக்தியின் பாதியளவு கார்போஹைடிரேட்டிலிருந்துதான் கிடைக்கிறது. சர்க்கரைப் பொருள்களில் கார்போஹைடிரேட் இருந்தாலும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடல் பெருக்க வாய்ப்புண்டு. உடற்பயிற்சி செய்தல் அவசியம்.

சருமத்தை இயற்கைத் தன்மையுடன் பாதுகாக்க நீங்கள் அதிக அளவில் இயற்கை உணவை உட்கொள்வதன் மூலம் பலனடையலாம். மூலிகை பேக் போட்டு சதைக்கு இறுக்கத்தை உண்டாக்கலாம். வாரம் இருமுறை (மூலிகை பேக் மூலம்) பேசியல் லிப்ட் செய்து கொள்ளவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply