அழகுக்குறிப்புகள்

Loading...

அழகுக்குறிப்புகள்பகட்டான உடைகளும், பளபளப்பான நகைகளும் அதற்கு ஏற்ற முறையில் உங்கள் மேக்கப்பும் அமைந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இது சந்தேகமில்லாத ஒன்று!

கண்களுக்கு:-
கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள ஐ-ஷாடோவை இமைகளில் தடவவும். இதன் மேல் தங்க நிற ஐ-ஷாடோவை தடவவும். இந்த இரண்டு நிறங்களும் நன்றாக கலக்கும் வகையில் விரல்களால் நன்றக கலக்கவும். பிறகு ஐ-லைனர் தடவவும் அது காய்ந்தவுடன் மஸ்காராவை தடவவும்.

கன்னங்களுக்கு:-
வெண்கல நிறத்தில் உள்ள பள்ஷ் தடவவும்.

உதடுகளுக்கு:-
முதலில் லிப் – லைனர் கொண்டு உதடுகளின் வடிவை சீராக வரையவும். பிறகு கருஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கால் உதடுகளுக்கு நிறத்தை அளிக்கவும். உதடுகளின் நடு பக்கத்தில் தங்க நிற லிப் – ஸ்டிக்கை லேசாக தடவவும்.

கூந்தலுக்கு:-
வலது அல்லது இடது பக்கத்தில் வகுடு எடுத்து ஜெல் தடவி சீராக சீவவும். பின்களை கொண்டு முடி வெளியே வராத படி பொருத்தவும். அழகான கொண்டை போட்டு அதை பூக்கள் அல்லது மணிகளால் அலங்கரிக்கவும். இறுதியில் ஹேர்ஸ்ப்ரே தடவவும்.

முக்கியமானது:-
உங்கள் மேக்கப் சாதனங்கள் தண்ணீரால் கரையாதவையாக இருந்தால் மேக்கப் நீண்ட நேரம் நீடிக்கும்.

முகத்திற்கு:-
முதலில் மாய்ஸ்சுரைஸ் செய்து, பின் உங்கள் நிறத்திற்கேற்ற ஃபவுண்டேஷனை சீராக தடவவும். இறுதியில் முகத்திற்கு காம்பேக்ட் தடவி மேக்கப்பை முடிக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply