அழகுக்கலை

Loading...

அழகுக்கலைஅழகுக்கலை என்பது இன்றைய உலகில் அத்தியாவசியமாகி விட்டது. காரணம், பெண்கள் தன்னம்பிக்கையோடு முன்னேறிச் செல்ல அழகும் ஒரு காரணமாகி விட்டது. தான் அழகாக இருக்கிறோம் என்று மனதால் உணரப்படும் ஒவ்வொருவரும் மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார்கள். தாங்கள் மேற்கொண்ட பணியில் முன்னேறியும் செல்கிறார்கள். நாம் அழகாக இல்லை என்று நினைக்கும் யாரும் தன்னம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பிறகு மனதளவில் உருக்குலைந்து போய் விடுகிறார்கள் என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். இப்படி மனதளவில் தான் அழகாக இல்லை என்று வாடும் பெண்கள், மிக எளிதாக தங்களை அழகாக மாற்றியமைத்துக் கொள்ள அழகுக்கலை நிலையங்கள் வழிவகுக்கின்றன.

முகப்பரு:

நாம் ஒருவரை பார்க்கும் போது சட்டென்று நம் மனதில் படிவது அவரது முகமாகும். அந்த முகத்தில் பருக்களோ, கரும்புள்ளிகளோ இருக்கும் பட்சத்தில் அவற்றை போக்குவது அவசியமாகும். பருக்களை போக்க ஒரு சில வாரங்கள் போதுமானது. முகத்தில் பருக்கள் இருக்கும் போது அவற்றை கிள்ளவோ, நகத்தால் நசுக்கி எடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் பரு இருந்த இடத்தில் வடுக்களாக மாறி விடும். எண்ணெய் அதிகம் சேர்த்த பண்டங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சோப்பு போட்டு முகம் கழுவாமல் கடலை மாவு கொண்டு முகத்தை கழுவி வர வேண்டும். இதனால் பருக்கள் குறைந்து முகம் பள பளப்பாகும்.

கண்ணின் கருவளையம் மறைய:

சில பெண்களுக்கு கண்களை சுற்றி கருவளையம் இருக்கும். அதை நீக்க வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான மெல்லிய பருத்தி துணியை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்ணின் மீது வைத்து அதன் மீது அரைத்த விழுதுகளை போட்டு இரவு படுக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தால் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். ஓய்வு இன்மை, சரியான உணவு பழக்கம் இல்லாமையே இதற்கு காரணமாகும். தூக்கம் வராவிட்டால் கூட நன்றாக கண்களை மூடியபடி ஓய்வெடுக்க வேண்டும். மூடிய கண்களின் மீது ஐஸ்கட்டி அல்லது வெள்ளரிக்காயை வெட்டி வைத்து கண்களுக்கு குளிர்ச்சியைகொடுக்க வேண்டும், வாரத்திற்கு ஒரு சில நாட்கள் இப்படி செய்து வந்தால் கண்களில் கீழுள்ள கருவளையம் நீங்கும். கண்களின் கீழ் பயன்படுத்தும் சில கிரீம்களையும் இதற்காக பயன்படுத்தலாம் தவறில்லை. காய்கறி, கீரை முதலிய உணவுப்பொருட்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கழுத்தில் கருவளையம்:

கழுத்தில் நகை போடுவதால் கழுத்து சுற்றி பலருக்கு கருத்து விடும். இதை போக்க கோதுமை மாவில் வெண்ணை கலந்து கழுத்தை சுற்றி பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினசரி செய்து வந்தால் கழுத்து கருப்பு கறை அகன்று விடும். சிலருக்கு உதடு உள்வாங்கி இருக்கும். இவர்களுக்கு உதடு வெளியே தெரியும்படி கிளிப்போட்டு மாற்றி அமைக்கலாம். பெரிய உதடாக இருந்தால் சிறிய உதடுபோல லிப்ஸ்டிக் மூலம் காட்ட முடியும். உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு ரத்தம் கசியும். சிலருக்கு உதடு கருத்து இருக்கும். இதற்கு காரணம் உடம்பில் அதிகமாக சூடு இருப்பதால் தான். இதைப்போக்க வெந்தயம் 1 ஸ்பூன் இரவில் ஊற வைத்து காலை எழுந்ததும் 1 டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விட வேண்டும். இரவு வெண்ணை சிறிதளவு உதட்டில் தடவவும். ஒரு சிறு உருண்டையை முழுங்கி விடவும் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உதடு நன்றாக இருக்கும்.

முகத்தை பாதுகாக்கும் முறை:

ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான சருமம் உள்ளது. அதில் ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எண்ணை வழியும் முகத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும். இவ்வாறு செய்து வந்தால் கறுத்துப் போவது, வறண்டு போவது, மற்றும் பருக்களிலிருந்து முகத்தைக் காப்பாற்றலாம்.

பெண்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாலே அவர்களின் அழகுப் பிரச்சினைகளில் பல தீர்ந்துவிடும். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம். பெண்கள் நல்ல தோற்றத்துடன் திகழும் போதுதான் தன்னம்பிக்கையும் கூடவே மகிழ்ச்சியும் ஏற்படும். அழகாக இருப்பதில் நம் சருமத்தின் பங்கு அதிகம். சருமத்தின் நிறத்தை நிர்ணயம் செய்வது மெலனின் எனப்படும் நிறமிகள். இவை சருமத்தின் அடியில் கூடக்கூட நிறம் குறையும். நிறம் குறைவதற்கு காரணம் என்னவென்றால் நாம் வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தின் கீழே உள்ள இந்த நிறமிகள் சருமத்தின் வெகு அருகில் வருகின்றன. அதனால் தான் வெயிலில் அலைபவர்களுக்கு உடம்பு கருக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply