அழகாய் ஜொலிக்க ஆசையா?

Loading...

அழகாய் ஜொலிக்க ஆசையாஅழகாய் இருக்கவேண்டும் என்று ஆசைப்படாத பெண்கள் உண்டா? அப்படியானால்… இயற்கையில் எப்படி அழகாக ஜொலிப்பது?

அது ஒரே நாளில் நடக்காது. சில வழிமுறைகளை கையாளுங்கள். நீங்கள் நிரந்தர ஆயுசுக்கும் அழகாக காட்சியளிப்பீர்கள்.

அன்றாட வாழ்க்கையில் தினசரி தண்ணீர் நிறைய குடியுங்கள். மேனி எழிலில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமையல் நேரத்தில் தினசரி ஏதாவது ஒரு சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுங்கள். அன்றாட உணவு வகைகளில் தக்காளி, இஞ்சி, பூண்டு, புதினா, கருவேப்பிலை, மீன், முட்டை ஆகியவைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் பால் குடியுங்கள். அவ்வப்போது ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, செவ்வாழை பழங்களை ருசியுங்கள்.

மாதத்துக்கு ஒரு தடவை தலைக்கு எண்ணைய் தேய்த்து ஊற வைத்து சிகைக்காய் கொண்டு குளியுங்கள். தினசரி குளியலில் அவசியம் மஞ்சள் தேவை. முடிந்த அளவுக்கு தினசரி சில உடற்பயிற்சிகளை செய்யுங்கள். குறைந்தது 10 நிமிடம்கூட போதும்.

இவைகளை கடைபிடித்து வாருங்கள். நீங்கள் செமகட்டையாக ஜொலிப்பீர்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply