அழகான புருவங்களைப் பெற…

Loading...

அழகான புருவங்களைப் பெற...புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தால் கண்களில் அழகு கூடும். முகமே புது பொலிவு பெறும். ஆனால் புருவங்களை சரியாக வடிவமைப்பதே பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.

புருவங்களை முகத்துக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்க சில குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:-

* டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிகளை அகற்ற)
* புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க்கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்)
* ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை மிருதுவாக்கி, வலியை குறைக்க)
* கண்ணாடி (அவசியம் தேவை)
* சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய)
* ஐப்ரோ பென்சில்

முதலில் புருவத்தை மேல் நோக்கி பிரஷ் செய்து விடவும். புருவத்தின் வளைவை விட நீட்டமாக உள்ள முடிகளை கத்தரியால் வெட்டி விடவும்.

புருவங்கள் கண்களின் ஒரு முனையில் ஆரம்பித்து மறு முனையில் முடிய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

நீங்கள் எந்த வடிவத்தில் புருவத்தை வடிவமைக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். இதோ தற்போது ஃபேஷனில் உள்ள சில வடிவங்கள்.

ஆஸ்ட்ரிங்ஜென்ட்டை புருவத்தின் மேல் தடவவும்.

புருவத்தின் மேல் பக்கத்திலிருந்து முடியை எடுப்பதை தவிர்க்க வேண்டும். புருவத்தின் கீழ் உள்ள முடிகளை ஒவ்வொன்றாக டுவீஜரால் எடுக்கவும்.

ஒரு பக்கம் புருவத்தை சரி செய்த பிறகு மறுபக்கமும் அதே வடிவத்தில் அமைய வேண்டும் என்பதை கவனத்தில் வைக்கவும்.

அடிக்கடி கண்ணாடியில் சரி பார்க்கவும்.

ஐபுரோ பென்சிலால் புருவத்தில் உள்ள காலியான இடங்களை நிறப்பவும்.

கவனம்:- மிக மெல்லியதாக புருவத்தை அமைப்பதை தவிர்க்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply