அறிமுகமாகியது LG-ன் V10 ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

அறிமுகமாகியது LG-ன் V10 ஸ்மார்ட் கைப்பேசிமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது V10 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
5.7 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரை, Hexa Core Qualcomm Snapdragon 808 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியினை முதற்கட்டமாக தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சேமிப்பு நினைவகத்தினை மெமரிகார்ட்டின் உதவியுடன் 2TB வரை அதிகரிக்கக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றவற்றுடன் Android 5.1.1 Lollipop இயங்குதளத்தினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இதன் விலையானது 680 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply