அச்சு முறுக்கு

Loading...

அச்சு முறுக்குபச்சரிசிமாவு – 4 கப்
முட்டை – 3
தேங்காய் 1
சர்க்கரை – 2 கப்
உப்பு – கால் தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்

முட்டையை உடைத்து எடுத்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிப் பால் எடுத்து, அப்பாலில் பச்சரிசி மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.
அதனுடன் சர்க்கரை, அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் உப்புச் சேர்த்து ஆப்பத்திற்கு மாவு கரைப்பதுபோல் சிறிது கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் முறுக்கு அச்சினை எண்ணெய்யில் முக்கி சிறிதுநேரம் வைத்திருந்து பிறகு அச்சினை மாவில் முக்கி மறுபடியும் எண்ணெய்யில் விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழிந்ததும் முறுக்கு தனியே கழன்று விழும். பிறகு அதனை திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply