வெள்ளை லட்டு

Loading...

வெள்ளை லட்டுதேவையான பொருட்கள்:

ரவை – அரை கிலோ அல்லது அதற்கு மேல்

நெய் – அரை கிலோ

பால்கோவா – 1000 கிராம்

சர்க்கரை – 800 கிராம் அல்லது அளவுக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யவேண்டும்.

பிஸ்தா,கிஸ்மிஸ் – 200 கிராம்

ஏல அரிசி பவுடர் – 4 கரண்டிகள்

சிறிதளவு எலுமிச்சை சாறு.

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து நெய்யை ஊற்றவும். ரவையைச் சேர்த்து ஓரளவுக்குக் கிளறவும். பிறகு பால்கோவா சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று கலந்தபிறகு அதனை அடுப்பிலிருந்து எடுத்து வைக்கவும். பிறகு வேறு பத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து சர்க்கரைப் பாகு காய்ச்சவும்.

எலுமிச்சை சாறு வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம் எலுமிச்சை சேர்த்தால் சர்க்கரயில் உள்ள அழுக்குப் போய் நல்ல வெள்ளை நிறம் வரும். பிறகு பாகைக் கிளறவும். பாகு கெட்டியானவுடன் ஒன்றன் பின் ஒன்றாய் மற்றவற்றையும் சேர்த்து கிளறி லட்டுகளுக்கு உருட்டுவது போல் உருட்டவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply