வாழைக்காய் புளி வறுவல்

Loading...

வாழைக்காய் புளி வறுவல்வாழைக்காய் – ஒன்று
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கடுகு – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – முக்கால் தேக்கரண்டி

வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து அரை கப் புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காயை போட்டு மஞ்சள் தூள் மற்றும் புளி கரைசலை ஊற்றி 15 நிமிடம் வேக வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வேக வைத்த வாழைக்காயை போட்டு அதிகமான தீயில் வைத்து பிரட்டவும்.

5 நிமிடம் கழித்து தீயை குறைத்து வைத்து உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 4 நிமிடம் பிரட்டி விடவும்.

வாழைக்காய் நன்கு ரோஸ்ட்டாக மாறும்வரை வைத்திருந்து பின்னர் இறக்கவும்.

சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply