முளைகட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஆபத்தா?

Loading...

முளைகட்டிய உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஆபத்தாகாய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சமையல் செய்து சுவைப்பதில் ஏராளமானோர் விரும்புவார்கள்.
வறுவல், போண்டா என சுவைத்தாலும், உருளைக்கிழங்கு முளைக்கட்டுவதால், அதனுள் ஒருசில இரசாயன மாற்றம் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றப்படுகிறது.

மேலும் நன்கு முற்றிய உருளைக்கிழங்கு மென்மையாக இருப்பதற்கு, அதில் உள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாற்றமடைந்திருப்பது தான் காரணம்.

உருளைக்கிழங்குகள் இப்படி மாற்றமடையும் போது அது இரண்டு வகையான விஷமிக்க அல்கலாய்டுகளை உற்பத்தி செய்கிறது.

அவையாவன சோலனைன் மற்றும் ஆல்பா சாகோனைன். இதில் சோலனைன் மிகவும் விஷமிக்கது. இதனை சிறிதளவு உட்கொண்டாலே மிகவும் ஆபத்து. இதனால் பல தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும்.

உருளைக்கிழங்கின் தோல் பச்சையாக இருந்தாலும், அதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் அந்த அல்கலாய்டுகள் இருக்கும்.

நீங்கள் வாங்கிய உருளைக்கிழங்கில் பச்சை நிறத்தோல் இருந்தால், அப்பகுதியை நீக்கிவிடுங்கள்.

பொதுவாக முளைக்கட்டியது ஆரோக்கியமானது என்ற கருத்து இருப்பதால், இதுக்குறித்து ஆய்வு ஒன்றில் பரிசோதிக்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் முளைக்கட்டிய உருளைக்கிழங்கின் தோல் நன்கு பிரஷ்ஷாக இருந்தால், அதில் உள்ள முளைக்கட்டியதை மட்டும் நீக்கிவிட்டு சாப்பிடலாம் என்று தெரியவந்துள்ளது.

முளைகட்டாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

* உருளைக்கிழங்கில் 78% நீர்ச்சத்து இருந்தால், இது 5-7 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஆனால் அதனை குளிர்ச்சியான, கருமையான மற்றும் காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கை ஈரப்பதமிக்க இடத்தில் வைத்து பராமரித்தால், முளைக்கட்டுவதோடு, விரைவில் கெட்டுப் போகவும் கூடும்.

* பிளாஸ்டிக் பைகளில் உருளைக்கிழங்கை சேமித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இதனால் உருளைக்கிழங்கு முளைக்கட்ட ஆரம்பிக்கும். வேண்டுமானால் பேப்பரைச் சுற்றி பாதுகாக்கலாம்.

* எக்காரணம் கொண்டும் உருளைக்கிழங்கை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பராமரிக்க வேண்டாம். ஏனென்றால், குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்கும் போது, அதில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றமடைந்து, இனிப்பாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply