முட்டை ஆம்லெட்

Loading...

முட்டை ஆம்லெட்முட்டை – 2
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – ஒன்று
இஞ்சி – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருஞ்சீரகப்பொடி – கால் தேக்கரண்டி
மிளகு – கால் தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
கடலைமாவு – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி – கால் தேக்கரண்டி
கடலெண்ணெய் – 4 தேக்கரண்டி

தோல் சீவிய இஞ்சி, மேல் தோல் நீக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் மூன்றையும் நன்றாக கழுவி பின் பொடியாக நறுக்கி கொள்ளவும். இவற்றுடன் கறிவேப்பிலை, பெருஞ்சீரகப் பொடி, உப்பு, கடலைமாவு, மஞ்சள்பொடி, மிளகுப்பொடி அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
பின் முட்டையையும் உடைத்து ஊற்றி ஒன்றாக கலக்கி வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கலவையை ஊற்றவும்.
பின் புரட்டிப் போட்டு 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சற்று சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply