முகப் பூச்சுகள் சிறிய குறிப்பு

Loading...


முட்டைப் பூச்சு

தேவையான பொருட்கள் :

முட்டை ஒன்றுதேன் -1 tsp.

செய்முறை :

முட்டை வெள்ளையை மட்டும்  நன்கு நுரை வரும் வரை அடித்துத் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.இவ்வாறாக வாரம் இருமுறை செய்து வந்தால் தோல் சுருக்கம் இல்லாமல் இளமையுடன் இருக்கும் .

ஓட்ஸ் பூச்சு

தேவையான பொருட்கள் :

1. ஓட்மீல் -2 tbsp

2. பன்னீர்-2 tbsp

3. பால்-1/2 கப்

செய்முறை :

பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும். இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும் .

பால்பவுடர் பூச்சு

தேவையான பொருட்கள் :

1. பால் பௌடர் -அரை  கப் இளம் சூடான

2. நீர் -ஒரு  கப்  பால் -3/4 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும்.முகம் மிருதுவாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply