மாம்பழ லஸ்ஸி

Loading...

மாம்பழ லஸ்ஸிகோடைக்காலம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது மாம்பழம் தான். சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏதுவாக மாம்பழத்தில் ஒரு குளிர்பானம் செய்து அசத்த நீங்கள் தயாரா..?

தேவையானவை

மாம்பழம்- 2
குளிர்ந்த பால்- 2 கப்
தயிர்- ஒரு கப்
சக்கரை – தேவையான அளவு
பாதாம், பிஸ்தா- தேவைகேற்ப

செய்முறை:

மாம்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.

பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்

பாதாம், பிஸ்தா தவிர மீதி அனைத்தையும் ஒன்றாக்கி நன்றாக மிக்ஸியில் போட்டு அடியுங்கள்.

அரைத்த கலவையை கப்பில் ஊற்றி பாதாம், பிஸ்தா அலங்கரித்து பரிமாறுங்கள்.

தேவைப்பட்டால் குளிர்சாதன பெட்டியில் வைத்து நன்கு குளுமையாக பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply