பைனாப்பிள் சாதம்

Loading...

பைனாப்பிள் சாதம்

தயிர் சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம் என்று நீண்டுகொண்டிருக்கும் பட்டியலில் இந்த பைனாப்பிள் சாதம் மிகவும் சுவையானதாகும். நொடி பொழுதில் சுலபமாக செய்யகூடிய பைனாப்பிள் சாதத்தை நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையானவை

பைனாப்பிள் – 1 (சின்ன சின்ன துண்டுகள்)
பாசுமதி (அரிசி) – கால் கப்
நெய் – ரெண்டு ஸ்பூன்
இஞ்சி – ஒரு ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – ஒன்று
உப்பு – தேவையான

செய்முறை

பைனாப்பிள் பழம் ஒன்றை தோல் சிவி, பழத்தைச் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும்.

பாசுமதி அரிசியைப் வடித்து ஆறவைக்கவும்.

வாணலியில் ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் பொடியா நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி சுவைக்கேற்ப உப்பு, ஒரு சிவப்பு மிளகாயை நசுக்கிப் போட்டு வதக்கி, பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.

கடைசியா சாதத்தைப் போட்டு லேசா கிளறி இறக்கி, ஒரு கைப்பிடியளவு கொத்துமல்லித் தழையைத் தூவினா பிரமாதமான ரைஸ் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply