பரங்கிக்காய் இனிப்பு கறி | Tamil Serial Today Org

பரங்கிக்காய் இனிப்பு கறி

பரங்கிக்காய் இனிப்பு கறிபரங்கிக்காய் – 250 கிராம்
வெல்லத் தூள் – கால் கப்
தேங்காய் துருவல் – கால் கப்
ஏலக்காய் – 3
கலர் பவுடர் – ஒரு சிட்டிகை

பரங்கிக்காயைச் சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் பரங்கிக்காய்த் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.

தண்ணீர் கொதித்து, சற்று வற்றியதும் அதில் வெல்லத் தூளைச் சேர்த்துக் கிளறி கரையவிடவும்.

அதனுடன் தேங்காய் துருவல், கலர் பவுடர், ஏலக்காய்ப் பொடி சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும்.

நன்கு கிளறிவிட்டு திரண்டு வரும் போது இறக்கிவிடவும்.

சுவையான பரங்கிக்காய் இனிப்பு கறி தயார்.

Loading...
Rates : 0
VTST BN