பன்னீர் கோகனட் லட்டு

Loading...

பன்னீர் கோகனட் லட்டு

பன்னீர் மற்றும் தேங்காய் காம்பினேஷனில் இந்த புது புதுமையான இனிப்பு வகையை மிக சுலபமாக செய்து விடலாம். பன்னீர், அனைத்து வகையான உணவுகள் தயார் செய்வதற்கும் பொருத்தமான பொருளாகும். இதனை தேங்காயுடன் சேர்த்து லட்டுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை

பன்னீர் – 250 கிராம்,
பொடித்த சர்க்கரை – 1/4 கப்
ரோஸ் எசென்ஸ் – சில துளிகள்
தேங்காய் – ஒரு மூடி
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்

செய்முறை

பன்னீரை துருவி, பொடித்த சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்துப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டவும்.

தேங்காயைத் துருவி, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரை உருகி, இளகி சற்று சேர்ந்தால்போல வரும்போது, இறக்கி விட வேண்டும்.

அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும் சிறிது எடுத்து கிண்ணம் போலச் செய்து, அதனுள் பன்னீர் உருண்டைகளை வைத்து நன்கு மூடி, உருட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply