நீரினால் பாதிக்கப்படாத அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

நீரினால் பாதிக்கப்படாத அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசிஸ்மார்ட் கைப்பேசிகளில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக Motorola நிறுவனம் நீர் உட்புகாத ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.

Moto G எனும் இக் கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினையும், 1.4GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Snapdragon 410 Processor தரப்பட்டுள்ளது.

இரண்டு பதிப்புக்களாக வெளிவரும் இக்கைப்பேசியில் 16GB சேமிப்புக் கொள்ளளவினைக் கொண்டதன் பிரதான நினைவகமாக 2GB RAM உம், 8 GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்ட கைப்பேசியின் பிரதான நினைவகம் 1GB RAM உம் ஆக காணப்படுகின்றது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2470 mAh என்பன தரப்பட்டுள்ளன.

மேலும் 8GB கொள்ளவினைக் கொண்ட கைப்பேசியானது 179.99 டொலர்கள் ஆகவும், 16GB சேமிப்புக் கொள்ளவினைக் கொண்ட கைப்பேசி 219.99 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply