நித்யகல்யாணி நாடியை சமப்படுத்தும் நித்யகல்யாணி

Loading...

நித்யகல்யாணி நாடியை சமப்படுத்தும் நித்யகல்யாணிநித்தியகல்யாணியின் பிறப்பிடம் மடகாஸ்கர். இது மேலும் இந்தோசீனா, இந்தோனேசியா, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் பரவியுள்ளன.

இது மணல் பாங்கான இடத்திலும், தரிசு நிலங்களிலும், தானாக நன்றாக வளரும். களர், மற்றும் சதுப்பில்லாத எல்லா நிலத்திலும் வளரும்.
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் குஜராத் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
பயன்கள்
நித்தியக் கல்யாணி நாடி வேகத்தை சமப்படுத்தவும், சிறுநீர்ச்சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.
மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும்.
இந்த பூக்களில் ஐந்து அல்லது ஆறு பூவை எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க உடல் பலவீனம், அதிக பசி, பசியின்மை தீரும்.
வேர்ச்சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் இரண்டு மூன்று முறை கொடுக்கச் சிறுநீர்ச் சர்க்கரை குறையும். நோய் கட்டுப்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply