செல்லுமிடமெல்லாம் கூடவே வரும் மின்சார காற்றாலை

Loading...

செல்லுமிடமெல்லாம் கூடவே வரும் மின்சார காற்றாலைமின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும்போது மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது தவிப்பவர்களுக்காக வந்துவிட்டது சிறிய காற்றாலை.
இதனை ஐஸ்லாந்தைச் சேர்ந்த Einar மற்றும் Agust Agustsson எனும் சகோதரர்கள் தயாரித்துள்ளனர்.

பல வகையான காற்றாலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் Trinity 50 என்பது 650 கிராம் எடை உடையதாகவும் 30 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையதாகவும் இருப்பதுடன் 50 வாற்ஸ் மின்சக்தியை பிறப்பிக்க வல்லது. இது 7,500 mAh Lithium-ion மின்கலத்திற்கு ஒப்பானதாகும்.

Trinity 2500 ஆனது 300,000 mAh மின்கலத்திற்கு ஒப்பானதாகவும் இதன் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகளை 160 தொடக்கம் 170 தடைவைகள் வரை சார்ஜ் செய்யக்கூடிய மின்சக்தி பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர Trinity 400, Trinity 1000 வகை காற்றாலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply