செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

Loading...

செரிமான பிரச்சனையா இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்கதினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் தயிரானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது நல்லதாகும். லாக்டோஸ் சகிப்புத் தன்மையின்மையால் அவதிப்படுபவர்களும் எந்த ஒரு கவலையும் இன்றி தயிரை உட்கொள்ளலாம்.
கால்சியம் நிறைந்த தயிர் பற்கள், எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. செரிமான பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது.
செரிமானத்திற்கு உதவும்
தயிர் வேகமாக செரிமானமாகிவிடும். உணவை வேகமாக உறிஞ்ச உங்கள் உடலுக்கு உதவும். காரசாரமான உணவை சாப்பிட்டால், அதனுடன் சேர்த்து தயிரையும் உண்ணுவது நல்லது.
வாய் பிரச்சனைகள் தீரும்
பாக்டீரியாவால் ஏற்படும் சில வாய் பிரச்சனைகளை தடுக்க தயிர் உதவிடும். தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.
பசியை அதிகரிக்க
உப்பு அல்லது சர்க்கரையுடன் தயிரை சாப்பிட்டால், பசியை அதிகரிக்க அது மிகவும் நல்லதாகும். தயிரினால் கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும்.
உடல் எடை குறைப்பு
ஹார்மோன் சமநிலையின்மையின் விளைவால் உடல் பருமன் ஏற்படும். கார்டிசோ அளவுகளை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க தயிர் உதவிடும். ஆனால் மற்றவர்களோ தினசரி கலோரி உட்கொள்ளும் அளவை பொறுத்து தான் தயிரை உட்கொள்ள வேண்டும்.
மன அழுத்தத்தை போக்கும்
மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க தயிர் உதவும். தயிரினால் கிடைக்கும் பயன்களில் இதுவும் ஒன்று. தயிர் உங்களை சாந்தப்படுத்தும். உங்களுக்குள் குளிர்ச்சியான உணர்வை உண்டாக்கும்.
மூல நோய்க்கு பலன் அளிக்கும்
மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது. தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.
இதயத்திற்கு நல்லது
ஆரோக்கியமான இதயத்தை பேணிட தயிர் உதவிடும். கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவிடும். தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான இதயத்தை பராமரித்திடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
கால்சியத்தை அதிகம் கொண்டது
தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில் தயிரை உட்கொள்வது நல்லது.
பொடுகை நீக்கும்
பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க இது உதவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply