சில்லி சீஸ் பராத்தா

Loading...

சில்லி சீஸ் பராத்தாகோதுமை மாவு – ஒன்றரை கப்
மைதா மாவு – அரை கப்
துருவிய சீஸ் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4-6
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு அல்லது எண்ணெய்

கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை முக்கால் மணிநேரம் ஊற வைத்து எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக உருட்டவும்.
சீஸ் துருவலில், அரிந்த பச்சை மிளகாயைப் பிசறவும். மாவு உருண்டையைச் சிறிது மைதா மாவில் தோய்த்து 4″ வட்டத்துக்குக் கனமான இடவும்.
அதில் பச்சை மிளகாய் சீஸ் துருவலில் சிறிதளவைப் பரவலாகத் தூவவும். இந்தப் பராத்தாவை ஒரு முறை பாதியாக மடித்துக் கொள்ளவும். இதன் மீது மேலும் சிறிது சீஸ் கலவையைத் தூவி மீண்டும் ஒரு முறை மடிக்கவும்.
இதைச் சிறிது மைதா மாவு தூவி நிதானமான கனத்தில் இடவும். சூடான தோசைக்கல்லில் போட்டு வேகவிடவும்.
பிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு வேக விடவும். பிறகு சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
சீஸ் வெளியே பிதுங்கி வராதவாறு பார்த்துக் கொள்ளவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply