சிக்கன் குருமா

Loading...

சிக்கன் குருமாசிக்கன் – அரை கிலோ
மட்டன் மசாலா – ஒரு பாக்கெட்
வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 10
தக்காளி – 150 கிராம்
தயிர் – ஒரு கப்
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 25 கிராம்
நெய் – 50 கிராம்
எண்ணெய் – 50 கிராம்
தேங்காய் – ஒரு மூடி
சோம்பு – ஒரு தேக்கரண்டி
பட்டை – சிறிது
கிராம்பு – சிறிது
உப்பு – தேவையான அளவு

முதலில் சிக்கனை சுத்தம் செய்து அத்துடன் மட்டன் மசாலாவை சேர்த்து ஒன்றாகக் கலந்து ஊற வைக்கவும்.
இஞ்சி, பூண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய், சோம்பினைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், தக்காளி இவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு போட்டுத் தாளிக்கவும்.
பிறகு நறுக்கின வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்.
அதனுடன் தக்காளியைப் போட்டு நன்றாக வதங்கிய பிறகு, இஞ்சி, பூண்டு விழுதையும் ஊற வைத்த சிக்கனையும் சேர்த்து வதக்கவும்.
உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். இது நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், சோம்பு கலவையைச் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
சிறிது நேரம் கழித்து தயிர் முழுவதையும் கொட்டி கிளறவும். நெய் முழுவதையும் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் இறக்கி புதினா, மல்லியைத் தூவவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply