கோழி வறுவல்

Loading...

கோழி வறுவல்கோழி – ஒரு கிலோ
இஞ்சி சாறு – அரை மேசைக்கரண்டி
பூண்டு சாறு – அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – பொரித்து எடுக்குமளவிற்கு
உப்பு – தேவையான அளவு

கோழிக்கறியை எலும்புகள் நீக்கி சுத்தம் செய்து தேவையான அளவுகளில் நறுக்கிக் கொள்ளவும்.
மிகவும் சிறியதாக இல்லாமல் நடுத்தர அளவுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
கோழிக்கறியுடன் இஞ்சி, பூண்டுச் சாறு, மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு துண்டங்களாக எடுத்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply