கோழி மசாலா

Loading...

கோழி மசாலாகோழி – ஒன்று
தயிர் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
எலுமிச்சைபழம் – ஒன்று
ஏலக்காய் – 5
பட்டை – ஒரு துண்டு
மிளகாய் வற்றல் – 7
பூண்டு – 12 பல்
இஞ்சி – ஒரு துண்டு
மிளகு – 10
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கிராம்பு – 5
கசகசா – ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 3 கரண்டி
உப்பு – தேவையான அளவு

கறியைப் பெரிய துண்டுகளாக வெட்டி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
இஞ்சி, பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கிராம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாவையும் சேர்த்து சிவந்தவுடன் கறியை சேர்த்து வேக வைக்கவும்.
கறி நன்கு வெந்தபின் எலுமிச்சம்பழம் பிழிந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளிந்து வந்ததும் இறக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply