கைகளில் உள்ள சதையை குறைக்கும் பயிற்சி!

Loading...

கைகளில் உள்ள சதையை குறைக்கும் பயிற்சி!

உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு அனைவருக்கும் அமையாது. சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும், கைகள் மட்டும் மிகவும் தடிமனாக இருக்கும்.

எந்த பயிற்சியாக இருந்தாலும் பொதுவான வார்ம்-அப்- பயிற்சிகளைச் செய்துவிட்டு, கைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது.

கைகளில் அதிகப்படியான கொழுப்பு இருக்கும் பெண்கள் கவலைப்படவேண்டியதில்லை.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.

முதலில் விரிப்பில் முழங்கால்களைச் சற்று முன்னோக்கி மடக்கியபடி, நேராக நிற்க வேண்டும்.

கைகளில் டம்பிள்ஸைப் பிடித்து, தலைக்குப் பின்புறம் வைத்தபடி நிற்க வேண்டும்.

இப்போது, மூச்சை இழுத்துப்பிடித்தபடி, டம்பிள்ஸைத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும்.

பின்னர், மூச்சை வெளியேற்றிபடி, கைகளைப் பின்நோக்கி இறக்கவும்.

இதேபோல 10 முறை செய்ய வேண்டும். கைகளை உயர்த்தும் போது, மூச்சை நன்றாக இழுத்து, கைகளை இறக்கும்போது மூச்சை வெளியேற்ற வேண்டும்.

ஆரம்பத்தில் 15 முறையும் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.

கை பகுதியில் அதிகளவு சதை இருப்பவர்கள் இந்த பயிற்சியை அதிக எண்ணிக்கை செய்ய வேண்டும்.

வீட்டில் செய்யும் போது டம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிறைத்து அதை பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply