குறைந்த விலையில் அறிமுகமாகும் Fitness Tracker

Loading...

குறைந்த விலையில் அறிமுகமாகும் Fitness Trackerஉடல் ஆரோக்கியம், உடல் பயிற்சி என்பவற்றினை கண்காணிக்க உதவும் Fitness Tracker சாதனங்களை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
இந் நிறுவனங்களின் வரிசையில் Acer நிறுவனமும் இணைந்து Liquid Leap+ எனும் சாதனத்தை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது.

100 டொலர்கள் பெறுமதியான இச் சாதனத்தினை குறிப்பிட்ட காலத்திற்கு 80 டொலர்கள் எனும் சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளது.

இதில் மின்னஞ்சல்கள், பாடல்கள், குறுஞ்செய்திகள் போன்வற்றினை கையாளும் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும் கறுப்பு, பச்சை, இளம் சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும் இச்சாதனத்தில் 0.94 அங்குல OLED தொடுதிரை, ப்ளூடூத் என்பன காணப்படுகின்றது.

தவிர இச் சாதனத்தை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply