காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள்: உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்கள்!

Loading...

காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்கள்!பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள் குறித்து அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் அவ்வுணவு சிறந்த உணவு என தெரியவந்துள்ளது.
பழைய சாதத்தில் விட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.
இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன.
இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
மேலும், தினமும் காலையில் பழைய சாதத்தினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சாதத்தினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.
அதுமட்டுமின்றி எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
பழைய சாதத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
காலையில் பழைய சோற்றினை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம். குறிப்பாக சோர்வு என்ற ஒன்றையே மறந்துவிடலாம்.
தற்போது பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை பழைய சோறு கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை காலை உணவாக எடுத்து வாருங்கள்.
இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.
எந்த அரிசியில் செய்யலாம்?
பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான் சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply