எ‌ள் காலிஃப்ளவர்

Loading...

எ‌ள் காலிஃப்ளவர்தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் – 1
பேகிங் பவுடர் – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெள்ளை எள் – 5 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
அஜினோ மோட்டோ – 1 ‌சி‌ட்டிகை
நல்லெண்ணெய் – பொரிப்பதற்கு
எள் (செசமி) – தேவைக்கேற்ப
மைதா மாவு – அரை கப்
மக்காச் சோள மாவு – அரை கப்
பேகிங் பவுடர் – 1 சிட்டிகை
உப்பு – ருசிக்கேற்ப
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது – 2 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்தெடு‌த்து, அதனை உப்பு சேர்த்த சுடு தண்ணீரில் ஓரிரு நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். பின்னர் சோயா சாஸுடன் உப்பு, மிளகுத் தூள், பேகிங் பவுடர், சிறிது அஜினோ மோட்டோ சேர்த்து கலக்கவும்.

இதில் காலிஃப்ளவரை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

மேலும் மைதா மாவு, ம‌க்கா‌ச் சோள மாவு, பே‌‌கி‌ங் பவுட‌ர், ‌சி‌றிது உ‌ப்பு, இ‌‌ஞ்‌சி, ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌விழுது ஆ‌கியவ‌ற்றை த‌ண்‌ணீ‌ர் ‌வி‌‌ட்டு கலந்து மேல்மாவை பஜ்ஜி மாவு போல கரைக்கவும்.

பின் ஊற வை‌த்‌திரு‌க்கு‌ம் காலிஃப்ளவரை மேல் மாவில் தோய்த்து, எள்ளின் மேல் புரட்டி எடுத்து, சூடான நல்லெண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply