இறால் சூப்

Loading...

இறால் சூப்இறால் சூப் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இது மாதிரியான சூப் வகைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தெரியும்.

தேவையானவை

சிக்கன் (வேகவைத்த) – 1/4 கப்
லவங்கம் – சிறிது
கேரட்- 1
வெங்காயம் – 1
பூண்டு – சிறிது
தக்காளி (வேகவைத்து மசித்தது ) – 1 கப்
மிளகு தூள் – சிறிது
இறால் – 1/4 கிலோ
தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை

தண்ணீர் கொதிக்கவைத்து இறாலை அதில் சிறிது நேரம் வேகவைக்கவும்.இறால் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.

வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம்,கேரட்,பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.இதனோடு வேகவைத்த சிக்கன்,உப்பு, மிளகு தூள், இறால்,இறால் வேகவைத்த தண்ணீர்,வேகவைத்து மசித்த தக்காளி ஆகியவற்றை சேர்த்து கொதிவந்ததும் இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply