இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் “செக்ஸ்” ஹாமோன்கள்: எச்சரிக்கை

Loading...

இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் செக்ஸ் ஹாமோன்கள்எச்சரிக்கைஇரவு நேரத்தில் பணிபுரிவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவை சேர்ந்த Pompeu Fabra University இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதற்கு காரணம் ஏன் என்பது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அதற்காக 100 பேரை தெரிவுசெய்து 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சிறுநீரை ஆய்வு செய்தது.

அதில், செக்ஸ் ஹார்மோன்களான ‘டெஸ்டோஸ்டிரோன்’ மற்றும் ‘ஈஸ்ட்ரோஜன்’ ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கையில் காலை 6 மணி முதல் 10 வரை சுரக்கும் இந்த ஹார்மோன்கள், இரவு வேலை பார்ப்பவர்களுக்கு இரவு 10 மணி முதல் 2 மணிவரை அதிகளவில் சுரப்பது தெரியவந்துள்ளது.

இதனால் இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மார்பக அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply