இன்று கரும்பை மென்று தின்ற உங்களுக்கு இனிப்பான செய்தி இது!

Loading...

இன்று கரும்பை மென்று தின்ற உங்களுக்கு இனிப்பான செய்தி இது!பொங்கல் என்றாலே, விடுமுறை, புத்தாடைகள், புதுப்படங்கள் என பல விஷயங்கள் இருந்தாலும் கரும்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாக பழங்களில் அனைத்தையும் விரும்பும் நாம், கரும்பினை அதிகமாக எடுத்துக் கொள்வது இல்லை. இத்தனைக்கும் கரும்பு அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் என்றாலும் பொங்கல் என்றால்தான் கரும்பின் நினைவு நமக்கு வருகின்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னைச் சேர்ந்த உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர், ஆங்குர் தேசாய் தலைமையில் அங்குள்ள பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவு ஒன்றில் ஆராய்ச்சி முடிவு ஒன்று கரும்பு சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
உடல் எடையைக் குறைக்க பெரும் முயற்சி மேற்கொள்கின்றனர். வாக்கிங் உடற்பயிற்சி என உடலை வருத்திகொள்வார்கள். இல்லையெனில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் என வாங்கி பக்க விளைவுகளை ஏற்படுத்தி கொள்வார்கள். ஆனால், ஆங்குர் தேசாய் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளதாவது, குண்டாக உள்ளவர்கள் இளைப்பதற்கு கரும்பு மிக உதவுகின்றதாம். கரும்பில் உள்ள அமிலங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கின்றது. இதனால் உடல் எடை குறைகின்றது. எடை குறைவதால் உடலில் ரத்த அழுத்தம் தானாகவே குறைகிறது. மேலும் உடலுக்கு தேவையான எனர்ஜியைத் தரவல்லது என்றும் கூறியுள்ளனர்.
கரும்பினை தொடர்ச்சியாக 3 மாதங்கள் சாப்பிட்டுவர நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக பக்கவிளைவுகள் ஏதும் இன்றி உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply