ஆழ்ந்த தூக்கத்தை தரும் உணவுகள்!

Loading...

ஆழ்ந்த தூக்கத்தை தரும் உணவுகள்!இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் உடல் அசதி, கண்ணில் கருவளையம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்.
அலுவலகப்பிரச்சனை, வீட்டுக்கவலை என பல பிரச்சனைகளால் தூக்கம் பாதிக்கப்பட்டாலும், உணவுகளும் ஒருவகையில் காரணமாக அமையும்.

எனவே, இரவில் ஆழ்ந்த உறக்கத்தை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

பாதாம்

பாதாமில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது நல்ல தூக்கத்தைப் பெறவும், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யவும் உதவும்.

மேலும் இதில் உள்ள புரோட்டீன் தூக்கத்தின் போதும் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே இரவில் தூங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் 2-3 பாதாம் பருப்புகளை சாப்பிடுங்கள்.

முக்கியமாக இந்த பாதாம் உப்பு சேர்க்காததாக இருக்க வேண்டும்.

பால்பொருட்கள்

பால் பொருட்களான சீஸ், பால் மற்றும் தயிர் போன்றவற்றில் தூக்கத்தை தூண்டும் ட்ரிப்டோபேன் உள்ளது.

எனவே இதனை இரவில் சாப்பிட்டால், நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

முட்டை

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம். மேலும் உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் இருந்தால் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது.

செர்ரி

இரவில் படுக்கும் முன் ஒரு கையளவு செர்ரிப் பழங்களை சாப்பிட்டால், இரவில் இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெறலாம்.

ஏனெனில் செர்ரிப் பழங்களில் செரரோனின் உற்பத்தியை அதிகரிக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply