ஆரோக்கியமான இதயத்திற்கு சூப்பர் டிப்ஸ்

Loading...

ஆரோக்கியமான இதயத்திற்கு சூப்பர் டிப்ஸ்இன்றைய அவசர காலகட்டத்தில் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்பதையே சமயத்தில் மறந்து விடுகிறோம். நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நம் உடம்பில் உள்ள முக்கிய அங்கம் தான் இதயம். மிகவும் முக்கியமான இந்த அங்கம் இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புவதால் நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.

நம் உயிர் நாடியாக விளங்கும் அப்படிப்பட்ட நம் இதயத்தை காத்திட பல வழிகள் உள்ளது.
* கீரைகளில் இதயத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன, எனவே தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது.
* முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும். * ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
* ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும்.
* பாதாம் எண்ணெய்யில் விட்டமின் “இ’ உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும்.
* தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடிப்பது இதயநோய் வராமல் நம்மை காப்பாற்றும்.
* ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு விட்டமின்”சி’ கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்ஸூடன் ப்ளுபெர்ரி பழம் சாப்பிட இதயம் சீராக இயங்கும்.
* சோயா உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்கு பதில் சோயா பாலை காலையில் அருந்தலாம். இதயம் வலுப்பெறும்.
* உப்பு இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும் போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
* இதயத்தை பாதுகாக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது நீச்சல் பயிற்சி. நீச்சல் அடிக்கும் போது இதயம் சுறுசுறுப்பாக செயல்படும். அது இதயத் துடிப்பிற்கு நல்ல பயிற்சியாக விளங்கும்.
* தேனீரில் உள்ள ப்ளேவோனாய்ட்டுகள் இரத்த குழாய்களை மேம்படுத்தி அதனை ஓய்வெடுக்க வைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைக்க தினமும் இரண்டு கப் டீ குடியுங்கள்.
* மில்க் சாக்லெட்டை காட்டிலும், டார்க் சாக்லெட்டையே உண்ணுங்கள். டார்க் சாக்லெட்டில் கொக்கோ உள்ளது. இதில் ப்ளேவோனாய்ட்டுகள் அதிகம் உள்ளதால் அவை இரத்த உறைதலை தடுக்கும்.
* தியானக் கலையின் மூலம் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்தினால் இதயத்தை அது வால்வுநோய் மற்றும் இதயச்சுவர் சிரை நோய் என்று பல நோய்களில் இருந்து காக்கும்.
* வைட்டமின் பி அடங்கிய உணவுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. அது இதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கும். அதற்கு அவகேடோ மற்றும் கடல் உணவுகளை சில எடுத்துக்காட்டுகளாக கூறலாம்.
* சில நேரங்களில் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்தும் காரியத்தில் ஈடுபட்டால், அது இதயத்திற்கு நன்மையை விளைவிக்கும். அப்படி ஒரு செயல் தான் மீன் பிடித்தல்.
* கோதுமை பிரட் மற்றும் ஓட்ஸ் ஆகியவைகள் இதயத்திற்கு சிறந்த உணவாக விளங்குகிறது. அதனால் அதனை உண்ணுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். * அனைத்து வகை நட்ஸ்களும் மனித உடலுக்கு நன்மையை விளைவிக்கும். இருப்பினும், உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் நட்ஸ் வகையை தவிர்க்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply