ஆண்கள் தேக பலம் பெற என்ன சாப்பிடலாம் !!

Loading...

ஆண்கள் தேக பலம் பெற என்ன சாப்பிடலாம் !!திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள அனைத்து ஆண்களும் தினமும் ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் இந்திரியச் சுரப்பு அதிகரிக்கும். ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, என பல சத்துகள் அடங்கியுள்ளன.

ஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த பூ நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும் மேலும் இதயம் பலப்படும்.

ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவால் குழந்தையின்மை குறை இருக்கும். துரியன் பழம் அணுக்களின் எண்ணிக்கயை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே துரியன் பழம் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் பலப்படும்.

தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்

தர்பூசணியில் உள்ள மேல் பகுதி அதாவது வெண்மை பகுதியில் தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம். இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறதாம். அதாவது ஒரு வயாகரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்சபூணி பழத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது.

பேரிச்சம் பழம், தேன் மற்றும் கற்கண்டு சேர்த்து லேகியப்பதமாகச் பிசைந்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் குண்டாகும் தேகம் பலம் பெரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply