அல்சர் நோயாளிகளா நீங்கள்? உங்களுக்கான உணவுப்பட்டியல்

Loading...

அல்சர் நோயாளிகளா நீங்கள் உங்களுக்கான உணவுப்பட்டியல்அல்சர் நோயாளிகள் தங்களுக்கான உணவு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
1. காலையில் எழுந்ததும் பால் அல்லது குறைவான அளவில் காபி அல்லது டீ அருந்தலாம்.

காலை: இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள். தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.)

* 11 மணி: புளிக்காத மோர்.

* மதிய உணவு: நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக் கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன் அல்லது மீன் கிரேவி.

* மாலை 4 மணி: பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் கிடைக்கும் ஏதாவது பழங்களை சாப்பிட வேண்டும்.

* இரவு: இரண்டு இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு, மோருடன் சாப்பிடலாம்.

கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட், தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த உணவு வகைகள் சேர்க்கலாம்.

சேர்க்க வேண்டியவை

* மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.

* கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க்காய்கள்.

* காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம்.

* தயிர்ப் பச்சடியில் காய்கள் அதிகமாகவும் தயிர் குறைவாகவும் சேர்க்கவேண்டும்.

* நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.

* எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இரு வேளை உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டியவை

* வறுத்த, பொரித்த உணவுகள், கடின உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

* பருப்பு , வறுத்த மீன், கடலைமாவில் செய்த பஜ்ஜி, பக்கோடா, மிக்சர் மற்றும் அதிகச் செரிவான சொக்லேட்டுகள், கருப்புக் காபி தவிர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply