அஜீத் பேரை கேட்டதுமே அதிர்ந்து போன தடங்கல்கள்

Loading...

அஜீத் பேரை கேட்டதுமே அதிர்ந்து போன தடங்கல்கள்அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரி ‘உனக்கென்ன வேணும் சொல்லு’. இந்த பாடலின் வரியில் உருவாகியுள்ள ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ஒரு சுவாரசிய தகவலை கூறினார்.
அஜீத் பேரை கேட்டதுமே அதிர்ந்து போன தடங்கல்கள்
திகில் மற்றும் ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு முதலில் ‘டெய்சி’ என்ற டைட்டில் வைத்திருந்ததாகவும், இந்த படம் ஆரம்பித்ததில் இருந்து பல தடங்கல்கள் வந்து கொண்டே இருந்ததாகவும் குறிப்பிட்ட இயக்குனர், இந்த படத்தை வெளியிடும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனத்தின் மகேஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த படத்திற்கு ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்று டைட்டிலை மாற்றியதாகவும் கூறினார்.
அஜீத் பட பாடலின் டைட்டிலை மாற்றியதும் இந்த படத்திற்கு ஏற்பட்டிருந்த தடங்கல் யாவும் விலகி, படவேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றதாக பெருமையுடன் கூறிய ஸ்ரீநாத், மேலும் இந்த படத்தின் குழுவினர்களில் பெரும்பாலானோர் அஜீத் ரசிகர்கள் என்பதால் இந்த டைட்டில் எங்கள் அனைவரையும் கவர்ந்துவிட்டது என்றும் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளதாகவும், அஜீத்தின் பாடல் வரிகள் இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுக்கும் என நம்புவதாகவும் படக்குழுவினர்கள் தெரிவித்தனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply